புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் !

Description: Ø This is the Third Digital Assignment for Applied Tamil . புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் ! முன்னுரை: காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள் வெண்பா , ஆசிரியம் , வஞ்சி , கலி , பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. புதுக்கவிதைக்கான இலக்கணம் · புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை , ‘ விருந்து ’ எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர் · பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே ...