புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் !




Description:

Ø  This  is the Third Digital Assignment for Applied Tamil .

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் !
முன்னுரை:
காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி,பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
புதுக்கவிதைக்கான இலக்கணம்
·         புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, விருந்து எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர்
·         பழையன கழிதலும் புதியன புகுதலும்
        வழுவல கால வகையினானே  என்று உரைத்தார் நன்னூலார்

இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவை எதுவுமில்லாத
கருத்துக்கள் தம்மைத் தாமே
ஆளக் கற்றுக்கொண்ட புதிய
மக்களாட்சி முறையே புதுக்கவிதை
எனப் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை எடுத்துரைப்பார் கவிஞர் மு.மேத்தா.
புதுக்கவிதையின் தோற்றம்
        புதுக்கவிதையின் தோற்றத்துக்கு உரைநடையின் செல்வாக்கு, மரபுக்கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரம் தோன்றியமை, மக்களின் மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியன அடிப்படைக் காரணங்களாகும்.
·         ஆங்கிலப் புதுக்கவிஞர் எஸ்ரா பவுண்டு புதிதாக்கு (Make It New) என ஒரு கட்டளைச் சொற்றொடரைப் பிறப்பித்தார்.
·         சுவை புதிது பொருள்புதிது வளம்புதிது சொல்புதிது சோதிமிக்க நவகவிதை என்றார் பாரதி.
Free Verse என்ற கவிதை அமைப்பும் ஆங்கிலத்தில் இருந்தது. பிரான்சின் போதலேர், ரிம்போ, மல்லார்மே, ஜெர்மனியின் ரில்கே, அமெரிக்காவின் வால்ட் விட்மன்,இங்கிலாந்தின் எஸ்ரா பவுண்டு, T.S. எலியட் போன்றோரின் முயற்சிகளால் புதுக்கவிதை பிறந்தது. தமிழில் இம்முயற்சிகள் தொடங்கப்பட்ட போது முதலில்வசன கவிதை என்றும் பின்னர் சுயேச்சா கவிதை லகு கவிதை விடுநிலைப்பா என்றும், “கட்டிலடங்காக் கவிதை என்றும் அதன் பின்னர்ப் புதுக்கவிதை என்றும் வழங்கப்பட்டன.

புதுக்கவிதையின் வளர்ச்சி
வால்ட் விட்மனின் புல்லின் இதழ்கள் என்ற புதுக்கவிதையைப் படித்திருந்த பாரதி அதைப் போலத் தமிழிலும் புதுமை படைக்கவேண்டும் என்றஆர்வத்தால் காட்சிகள் என்ற தலைப்பில் புதுக்கவிதை எழுதினார் அதற்கு அவர் இட்ட பெயர் வசன கவிதை என்பதாகும். பாரதி வழியில் .பிச்சமூர்த்தி,கு..ராசகோபலன்,வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன், போன்றோர் புதுக்கவிதைகளைப் படைத்து தமிழ்ப்புதுக்கவிதைகளை வளர்த்தனர்.

புதுக்கவிதை வளர்ந்த மூன்று காலகட்டங்கள்
1.        மணிக் கொடிக் காலம்
2.        எழுத்துக் காலம்
3.        வானம்பாடிக் காலம் ஆகிய காலகட்டங்களில் தோன்றிய தமிழ் இதழ்கள் புதுக்கவிதைத் துறைக்குப் பொலிவூட்டின

1.மணிக்கொடிக் காலம்
மணிக் கொடிக் காலத்தில் மணிக்கொடி என்ற இதழ் மட்டுமன்றி, சூறாவளி, காலமோகினி, கிராமஊழியன், சிவாஜிமலர், நவசக்தி, ஜெயபாரதி ஆகியஇதழ்கள் புதுக்கவிதைகளை வெளியிட்டுவந்தன இவற்றுள் மணிக்கொடி இதழ் முதலில் தோன்றியதால் இக்காலத்தை மணிக்கொடிக் காலம் என்று அழைத்தனர்.இக்காலத்தில், புதுக்கவிதை முன்னோடிகளான .பிச்சமூர்த்தி, கு..ராசகோபாலன், .நாசுப்பிரமணியன், புதுமைப்பித்தன் போன்றோர் மணிக்கொடிகாலத்துக்கதாநாயகர்களாக விளங்கினர்.

 2.. எழுத்துக் காலம்
எழுத்து, சரஸ்வதி, இலக்கிய வட்டம், நடை, தாமரை, கசடதபற, போன்ற இதழ்கள் இக்காலகட்டத்தில் புதுக்கவிதையை வளர்த்தன..பிச்சமூர்த்திஆரம்பித்து வைத்த புதுக்கவிதை இயக்கம், எழுத்து இதழில் தொடர்ந்தது. மயன், சிட்டி, வல்லிக்கண்ணன், ஆகியோர் ஒன்றுசேர்ந்து சிசுசெல்லப்பா,  .நாசுப்பிரமணியன் போன்றோர் இக்காலத்துக்கு சிறப்பு சேர்த்தனர்

3.வானம்பாடிக் காலம்
வானம்பாடி,தீபம், கணையாழி, சதங்கை முதலிய இதழ்கள் இக்காலத்தில் புதுக்கவிதைக்கு முன்னுரிமை தந்து வெளியிட்டன. புவியரசு, ஞானி,முல்லைஆதவன், அக்கினிபுத்திரன், சிற்பி, கங்கை கொங்காண்டான், தமிழ்நாடன், சக்தி கனல், மு.மேத்தா, தமிழன்பன்,  ரவீந்திரன் முதலியோர்வானம்பாடிக் கவிஞர்களாவர்

   சில புதுக்கவிதைச் சான்றுகள்
     நல்ல காலம் வருகுது                                    உன் கையிலா கடிகாரம்?
   நல்ல காலம் வருகுது                                    கடிகாரத்தின் கையில்
  தெருவிலே  நிற்கிறான்                                   நீ!
குடுகுடுப்பைக் காரன்!                                           

சுப்பிரமணிய பாரதி:

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி  ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும்மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.

பெயர்: சுப்பையா () சுப்பிரமணியன்
பிறப்பு: டிசம்பர்11, 1882
பணி: செய்தியாளர்
மற்ற பெயர்கள்: பாரதியார், சுப்பையா, முண்டாசுக் கவிஞன், மகாகவி, சக்தி தாசன்.
படைப்புகள்: பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு மற்றும் பல.
பெற்றோர்: சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள்.
மனைவி: செல்லம்மாள்.
இறப்பு: செப்டம்பர் 11, 1921
இறப்பிடம்: சென்னை, இந்தியா.

பாரதிதாசன்:

பாரதிதாசன்  புதுச்சேரியில் பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர்,சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.

பெயர்: கனக. சுப்புரத்தினம்
பிறப்பு: ஏப்ரல்,29,1891.
இடம்: புதுவை.
புனைப்பெயர்: பாரதிதாசன்.
கல்வி: புலவர்.
பணி: தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி
குறிப்பிடத்தக்க படைப்பு: பாண்டியன் பரிசு.
இறப்பு: ஏப்ரல் 21,1964.
இறப்பிடம்: சென்னை

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை:

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை  20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.

பெயர்: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
பிறப்பு: ஜூலை 27,1876
பெற்றோர்: சிவதாணுப்பிள்ளை, ஆதிலட்சுமி
மனைவி: உமையம்மை
பட்டம்: கவிமணி
பணி:  கவிஞர்
குறிப்பிடத்தக்க படைப்பு: பாண்டியன் பரிசு.
இறப்பு: செப்டம்பர் 26,1954.

நாமக்கல் கவிஞர்:


நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுதுபோன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர்போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுகிறார்.

பெயர்: வெ.  இராமலிங்கம் பிள்ள
பிறப்பு: அக்டோபர் 19,1888
பெற்றோர்: வெங்கடராமன், அம்மணியம்மாள்
குறிப்பிடத்தக்க படைப்புகள்: மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள் முதலியன
பணி: கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி
இறப்பு: ஆகஸ்ட் 24, 1972.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்:

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

பெயர்: .கல்யாணசுந்தரம்
பிறப்பு: ஏப்ரல் 13, 1930
மனைவி: கௌரவம்மாள்
பணி: கவிஞர்
இறப்பு: அக்டோபர் 8, 1959

கண்ணதாசன்:

கண்ணதாசன் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

பெயர்: முத்தையா
பிறப்பு: ஜூன் 24 1927 
இடம்: சிறுகூடல்பட்டி, சிவகங்கை மாவட்டம்தமிழ்நாடு, இந்தியா
புனைப்பெயர்: காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
பணி: கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர், இலக்கிய ஆசிரியர்
இறப்பு: அக்டோபர் 17, 1981.

ந. பிச்சமூர்த்தி:

ந.பிச்சமூர்த்தி அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப்புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

பெயர்: ந. பிச்சமூர்த்தி
பிறப்பு: நவம்பர் 8, 1900
இறப்பு: டிசம்பர் 4, 1976.

கவிஞர் மீரா:

மீரா என்ற மீ. ராசேந்திரன் 1938 ஆம் ஆண்டு சிவகங்கையில் பிறந்தவர். சிவகங்கைக் கல்லூரியில் படித்து அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்றியவர்.
திறனாய்வு: மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு
கவிதை: மீ.இராசேந்திரன் கவிதைகள், மூன்றும் ஆறும், மன்னர் நினைவில், கனவுகள்+கற்பனைகள்= காகிதங்கள், ஊசிகள், கோடையும் வசந்தமும், குக்கூ.

கட்டுரைகள்: வா இந்தப் பக்கம், எதிர்காலத் தமிழ்க்கவிதை, மீரா கட்டுரைகள்.

 சிறப்புகள்: தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு, பாவேந்தர் விருது, சிற்பி இலக்கிய விருது, தமிழ்ச் சான்றோர் பேரவை விருது.


அப்துல் ரகுமான்:

அப்துல் ரகுமான்,  தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப்புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல்ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
1960 க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
பெயர்: அப்துல் ரகுமான்
பிறப்பு: நவம்பர் 9, 1937
இடம்: மதுரை கிழக்குச் சந்தைப்பேட்டை
மற்ற பெயர்: அருள்வண்ணன்
கல்வி: கலை முதுவர் முனைவர்
பணி: பேராசிரியர்
பெற்றோர்: மஹி என்னும் சையத் அஹமத் ஜைனத் பேகம்.

மு. மேத்தா:

மு. மேத்தா (முகமது 
மேத்தா) பெரியகுளத்தில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார்.
உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா, வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர். இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள். காதல் சோகமும், தமிழ்த் தாகமும் இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும் இறங்குவதுண்டு. சமூக விமர்சனத் தொனியில் அமைந்த "தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி" என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும். மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களுள் "ஊர்வலம்" தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும். இவரது "சோழ நிலா" என்னும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும். இவர் திரைப்படத் துறையிலும் பாடல்கள் எழுதி வருகிறார்.
"நான் வெட்ட வெட்டத் தழைப்பேன்
இறப்பினில் கண் விழிப்பேன்
மரங்களில் நான் ஏழை
எனக்கு வைத்த பெயர் வாழை"
போன்ற வரிகள் இவர் போக்கினைக் காட்டும்.
"வானம்பாடி" என்ற புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகம் ஆன கவிஞர்களுள் மு.மேத்தாவும் ஒருவர்.

பெயர்: முகமது மேத்தா
பிறப்பு: செப்டம்பர் 5, 1945
இடம்: பெரியகுளம்
பணி: கவிஞர், பாடலாசிரியர்.

வைரமுத்து:

வைரமுத்து , புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஆறு முறை பெற்றுள்ளார். நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் பொன்மாலைப் பொழுதுஎனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் சனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் . ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.

பெயர்: வைரமுத்து
பிறப்பு:  ஜூலை 13, 1953
குறிப்பிடத்தக்க விருதுகள்: சிறந்த பாடலாசிரியருக்கான குடியரசுத் தலைவர் விருதை 6 முறை (1985),(1993),(1994),(1999),(2002),(2010) பெற்ற பெருமைக்குரியவர், பத்ம ஸ்ரீ.

சிற்பி. பாலசுப்ரமணியன்:

சிற்பி பாலசுப்பிரமணியம் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர் சிறந்த கவிஞர், புகழ்பெற்ற கல்வியாளர், இலக்கிய இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்ட ஒரு பல்துறை அறிஞர்.

பெயர்: பொ.பாலசுப்பிரமணியம்
பிறப்பு: ஜூலை 29, 1936
கல்வி: முனைவர் (சென்னைப் பல்கலைக்கழகம், 1987)
முதுகலை, தமிழ்(அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1956)
இடைநிலை (திருச்சி ஜமால் முகமது கல்லூரி, 1953),பள்ளி (தத்தமங்கலம் சீலி நினைவு உயர்நிலைப்பள்ளி, பாலக்காடு, 1951)
பணி: கவிஞர், பேராசிரியர், எழுத்தாளர், இதழாளர், பல்வேறு திட்டங்களுக்குப் பொறுப்பாளர், சாகித்திய அகாதெமி ஒருங்கிணைப்பாளர்
பெற்றோர்: கி. பொன்னுசாமி, கண்டியம்மாள்.

முடிவுரை:
 மாறும் உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்குத் தக்க சான்றாக புதுக்கவிதை வளர்ச்சியைக் கூறலாம். மேற்கண்ட கட்டுரையின் வழியாக தமிழில்புதுக்கவிதையின் தோற்றத்தையும், அதன் வளர்ச்சியையும் நன்கு உணரலாம்.


Comments

  1. Miga arumaiyaana oru katturai

    ReplyDelete
  2. மிக்க பயனுள்ள கட்டுரை

    ReplyDelete
  3. Easy to understand and very useful 😊

    ReplyDelete
  4. மிகவும் அழகான மற்றும் பயனுள்ள கட்டுரை

    ReplyDelete
  5. Super Essay! Thank You for this essay it helped me a lot to complete my assignment!

    ReplyDelete
  6. பாவலர் இன்குலாப் குறித்துப் பதிவிடுக

    ReplyDelete
  7. Exam ku help pannathuku nanrigal pala pala🙏

    ReplyDelete
  8. Very useful for studies thanking you

    ReplyDelete
  9. idha pathu dha na exam la copy panna🙏🙏🙏🙏

    ReplyDelete
  10. Apa yevanum online xam பாக்காம ezuthala

    ReplyDelete
  11. இந்த பதிவு அருமையாக இருந்தது

    ReplyDelete
  12. Very super. Very usefull
    Thank u so much guys🙏🙏🙏🙏

    ReplyDelete
  13. Very very tq u ...It's very usfull
    For me .....Ellarukum usefull la
    Erukumm tq u

    ReplyDelete
  14. Thnx in Bose Esakki 🔥💙💙💙💙💙💙💙💙

    ReplyDelete
  15. இப்பப்படைப்புக்கு நன்றிகள்

    ReplyDelete
  16. மிக அருமையான கட்டுரை மிகவும் தெளிவாக உள்ளது

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete

Post a Comment